Friday 23 June 2017

நோய் நொடி இல்லாமல் வாழ யோகாவை கற்போம்



அனைத்துலக யோகா தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜுன் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஐ.நா. சபையில் யோகா தினத்தையொட்டி முதல்முறையாகப் பேசினார்.  

உடல் நலம், மனநலம் இரண்டையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும் இந்தியாவின் தொன்மையான யோகாவுக்கென தனி தினம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவித்தது.

இந்த தினத்தை முன்னிட்டு, மலேசிய பிரணவ யோகா சிகிச்சை மையத்தின் பயிற்றுனர்களையும் பயிற்சியாளர்களையும் 'பாரதம்' மின்னியல் ஊடகம் சிறப்பு நேர்காணலை மேற்கொண்டது. யோகாவைப் பற்றி அவர்கள் பகிர்ந்து கொண்டவை.


1. மாஸ்டர் மகேந்திரன்

இது இந்தியர்களுக்கு சொந்தமான ஒரு கலை. நம்முடைய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். 15 ஆண்டுகளாக இந்த கலையில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய தந்தை 47 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். இதில் இந்தியர்களின் ஈடுபாடும் விழிப்புணர்வும் மிகக் குறைவாக உள்ளது. மலேசியா முழுவதும் யோகா வகுப்பு ஆங்காங்கே நடைபெறுகிறது. இதில் அவர்கள் கலந்து கொண்டு நன்மை பெற வேண்டும் என்பதே எங்களின் அவா என்று மலேசிய பிரணவ யோகா சிகிச்சை மையத்தின் செயலாளரும் யோகா மாஸ்டருமான மகேந்திரன் ராஜமாணிக்கம் கூறினார்.


 2. மாஸ்டர் மதியழகன் ராமசாமி

யோகா பயிற்சியை கற்றுக்கொள்பவர்கள் இதில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமே தவிர, அரை குறையுமாக பயிலக் கூடாது. இந்த பயிற்சியை கற்று கொண்டு உடல் நிலையில் மாறுதல் ஏற்பட்டு பல நோய்களிலிருந்து விடுபட முடியும். யோகா கலையை முழுமையாகக் கற்று கொண்டு அதன் நன்மைகளை நாம் பெற வேண்டும் என்று மாஸ்டர் மதியழகன் ராமசாமி சொன்னார்.







3. மாஸ்டர் கன்னியம்மா

யோகா பயிற்சியை கடந்த 7 வருடங்களாக பயின்று வருகிறேன். இப்போது மாணவர்களுக்கும் கற்று கொடுத்து வருகிறேன். நமது சமுதாயத்தினரை காட்டிலும் மற்ற இனத்தவர்கள் இக்கலைக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இந்தியர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணிவிடலாம். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதை மாற்றியமைக்க வேண்மென்றால் யோகா கலையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மாஸ்டர் கன்னியம்மா தெரிவித்தார்.




4. மாஸ்டர் மீனாலோஷினி

10 வருடங்களாக யோகா கலையில் ஈடுபட்டுள்ளேன். இதைப் பன்படுத்தினால் வாழ்க்கையில் நோய் நொடி இல்லாமல் சீரும் சிறப்பாக வாழலாம். யோகாவை இளம் தலைமுறையினர் பயின்று  வரும் சிறப்பானது. அவர்களுக்கு வழிக்காடியாக இருந்து, யோகா கலைவை தொடர்ந்து நிலைநாட்டுவோம் என்று மாஸ்டர் மீனாலோஷினி கூறினார்.

No comments:

Post a Comment