கோலாலம்பூர்-
சாலை விபத்துகளை
குறைக்கும் நோக்கில் நாடெங்கிலும் 100 ஏஇஎஸ் கேமராக்கள் பொருத்தப்படும்
என போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ அப்துல் அஸிஸ் கப்ராவி தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு தொடக்கம் இத்திட்டம் அமலாக்கம் காணவுள்ளது என குறிப்பிட்ட அவர்,
2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 விழுக்காடாக
குறைக்கும் அனைத்துலக் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏஇஎஸ் கேமராக்கள் பொருத்தப்படும்.
நாட்டிலுள்ள
நெடுஞ்சாலைகள்,
கூட்டரசு சாலைகளில் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். தற்போது நாடெங்கிலும் 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
என பாரிட் ராஜாவில் நடைபெற்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது
அஸிஸ் கப்ராவி தெரிவித்தார்.
No comments:
Post a Comment