Monday 19 June 2017

'அப்பா' தான் என் உலகம் - 1



ஒவ்வொரு தந்தையருக்கும் தனது பிள்ளைகளே உலகம் ஆகும். அவர்களுக்காக ரத்தத்தையே வியர்வையாக சிந்தும் தந்தையரின் அர்ப்பணிப்புகள் சொல்லில் அடங்காதவை.

பிள்ளைகளுக்காக இரவு பகல் பாராமல் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வேண்டிய அனைத்தையும் செய்து வைக்கின்றனர்.

உணர்வுகளை வெளிகாட்ட தெரியாததால்தான் பலருக்கு தந்தையரின் அருமைகள் தெரியாமலே போய்விடுகிறது. ஆனால் எது நடந்தாலும் பிள்ளைகளுக்காக அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் கூட தனி சுகம் தான்.

அத்தகைய தந்தையருக்காக இன்று கொண்டாடப்படும் 'தந்தையர் தினம்' அவர்களது உலகத்தில் பிள்ளைகளால் அங்கீகரிக்கப்படுகின்ற 'வெற்றி விழா' ஆகும்.

தங்களது தந்தையரின் தியாகங்களை உணர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் பிள்ளைகளின் வாழ்த்து மடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

1. அர்ப்பணிப்பின் தியாகச் சுடர் 'தந்தை'- இளங்கோவன்


சுங்கை சிப்புட்  தோட்டப் புறத்தில் பிறந்து வளர்ந்து என்னை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து பல இன்னல்களையும் சமாளித்து, தனது கஷ்டங்கள், பணப் பிரச்சினைகள் அனைத்தையும் பார்க்காமல் சில சமயங்களில் ஊன் உறக்கம் இன்றி  இரவு பகல் பாராமல் இரு வேலைகள் செய்து, நான் கேட்கும் அனைத்தையும் வாங்கி தந்தார்.  இன்று நான்  மே வங்கியில் முதன்மை நிர்வாகியாக பதவியில் இருக்க காரணமே என் தந்தை திரு. அண்ணாமலையின் தியாகங்கள் தான் ஆகும்.


2. தாய்க்கு தாயாய் 'தந்தை' - பிரவீனா, நஷ்மிதா


தாய்க்கு தாயாய், தந்தைக்கு தந்தையாய், தோழனுக்கு தோழனாய் நம்முடன் வாழும் ஒரே ஜீவன்  தந்தை தான். அப்படிப்பட்ட தந்தையைதான் இறைவன் எனக்கு தந்துள்ளார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. எங்கள்  தந்தை திரு.சண்முகம்  தந்தையாக மட்டுமல்லாமல் அன்பு காட்டுவதில் அம்மா, பாசம் காட்டுவதில் அக்கா, கிண்டல் செய்வதில் தோழன், அறிவுரை வழங்குவதில் அண்ணன்  என உறவுகளை தன்னகத்தே கொண்டுள்ளார். 


3. 'தந்தையே' எங்களுக்கு உற்ற தோழன் - ஷேகிதா, சந்திரா, சூரியா, ஈஸ்வரர்


எங்கள் தந்தை திரு.கலைச்செல்வன் எங்களுக்கு உற்ற நண்பர். எங்களை எப்போதுமே மகிழ்ச்சியுடனும் எங்களின் அன்றாட வாழ்க்கையை அழகாக வடிவமைப்பார். அவரை சிறிது நேரம் பிரிந்திருந்தாலும் சோர்வடையும். பாசம் காட்டும் இத்தகைய 'அப்பா' கிடைக்கப்பெற்றதில் நாங்கள் பாக்கியசாலிகளே.

தொடரும் தந்தையர்களின் அர்ப்பணிப்பு....

No comments:

Post a Comment