Thursday 8 June 2017

சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை காப்பாற்றியவர் கர்ப்பால் சிங் – சிவநேசன்


ஷா ஆலம்-
வரலாற்றுமிக்கப் பழைமை வாய்ந்த சீபீல்ட் ஆலயத்தை காப்பாற்றவும் சட்டரீதியாக அதனை நிலநிறுத்தவும்பெருமுயற்சி எடுத்தவர்களில் ஒருவர் ஜனநாயக செயல் கட்சியின் தேசியத்தலைவரான அமரர் கர்ப்பால் சிங் எ நினைவுறுத்தினார் சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் .சிவநேசன்.

1993இல் முறையாக செல்லப்பாவின் தலைமையில் பாழடைந்து கவனிப்பாரற்று இருந்த ஆலயத்தை ஆர்..எஸ்.சில் பதிவுப்பெற்று மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கப்பெறச் செய்தவர் அவர்.

அக்காலக்கட்டத்தில் இந்த ஆலயத்தை பாதுகாக்க தவறிய மஇகாவும் அன்றைய மாநில தேசிய முன்னணி அரசும், இந்நிலத்தை தனியார் மேம்பாட்டு நிறுவனத்துக்கு விற்று ஆலயத்தை அகற்றவும் முயற்சிகளை மேற்கொண்டது.

அமரர் வழக்கறிஞர் கர்ப்பால் சிங் அவர்களின் துணையோடு கே.கே.செல்லப்பா மட்டும் அன்று வழக்கை தொடுத்திராமல் இருந்திருந்தால், இன்று இருந்த இடமே இல்லாமால் காணாமல் போயிருக்கும் சீபீல்ட் மாரியம்மன் ஆலயம்.

இன்று அந்த ஆலயத்தை உடைக்கக்கூடாது என்று நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறது மஇகா. மஇகாவின் தூண்டுதலின் பேரில் ஒரு கும்பலும், அரசு சார்பற்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் சேர்ந்து நான்கு குழுவாக இணைந்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதானது, இத்தனை ஆண்டுகாலமும் போராடி வெற்றிபெற்று கிடைத்த நன்மை யாருக்கும் பயனில்லாமல் பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும், என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.

புதிய இடத்திற்கு மாற்றம் காண முடியாது; இருக்கும் இடத்திலியே ஆலயத்தை நிலைநிறுத்துவோம் என்பதை அன்றே ஒற்றுமையாக இருந்து நீதிமன்றத்தின் வழி தீர்வை பெற்றுக் கொள்கிறோம் என உறுதியாக நின்றிருந்தால் இன்று ஆலயத்திற்கு இந்த நிலை வந்திருக்காது.

நாட்டில் காலந்தொட்டு பல ஆலயங்கள் இடமாற்றம் கண்டுள்ளது கண்கூடு. அதே போன்று ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வழங்கியுள்ள நிலத்திலும் மிகப்பிரமாண்டமான ஆலயத்தை அம்மனுக்கு நாம் எழுப்பலாம். மேலும், ஆலயத்தில் அமைந்துள்ள பழங்கால அரச மரத்தை அழிக்காமல் பாதுகாக்க கலை, கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சு தூரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆலய விவகாரத்தில் அரசியல் தீய நோக்கோடு களம் காணும் தீய சக்திகளுக்கு நிச்சயமாக அந்த மதுராபதியின் காவல் தெய்வமான அம்மன் தக்க தண்டனை வழங்கி தண்டிப்பால் என்பது உறுதி என ஜசெகவின் பேராக் மாநில உதவித்தலைவர்களில் ஒருவரான சிவநேசன் கூறினார்.  

எழுத்து- சிவசீலன்

No comments:

Post a Comment