Tuesday, 23 June 2020

PKR Kapar: கட்சி தொண்டர்களிடம் வசமே உள்ளது மதுரை வீரன் அறிவிப்பு

காப்பார்- 

பி.கே.ஆர் காப்பார் தொகுதி கட்சி தொண்டர்களிடம் வசமே உள்ளது என்று அத்தொகுதியின் துணைத்தலைவரும் கிள்ளான் நகரண்மை கழக உறுப்பினருமான மதுரை வீரன் மாரிமுத்து  தெரிவித்தார்.
தொண்டர்கள் வியர்வை சிந்தி வளர்க்கப்பட்ட கட்சி பிகேஆர். சில தலைவர்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக மக்கள் சேவையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட கட்சியை விட்டு வெளியேறுவது கட்சிக்கு செய்யும் துரோகம் என்றும் காப்பார் தொகுதியை பொருத்தவரை அது இன்னமும் உண்மையான தொண்டர்கள் வசமே உள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

புதிய தற்காலிக தலைவர் கோ பூன் பொக்  கட்சிக்காக கடுமையாக போராட வேண்டும் என்று கூறினார். 

கட்சியின் பெண்கள் தலைவியான திருமதி லெட்சுமி  காப்பார் தொகுதி நிலைத்திருக்க கடுமையாக போராடுவோம் என்று கூறினார்.

காப்பார் தொகுதியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மதுரைவீரன், தம்மால் இயன்ற அனைத்து சேவைகளையும் இனபாகுபாடின்றி செய்து வந்துள்ளதாகவும் இனிமேல் தன் சேவையை இன்னும் சிறப்பாக செயல்ப்படுத்த விருப்பதாகவும் அவர்  கூறியதுடன் யாருக்கும் தான் விலைபோக மாட்டேன் என்றும் மேலும் கூறினார்.

சமீபகாலமாக கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், குறைப்பாடுகள் காரணமாக பி.கே.ஆர் கட்சியின் தலைவராக இருந்த செமந்தா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில துணை சபா நாயகருமான டாக்டர் டரோயா அல்விஸ் , அத்தொகுதியின் துணைத்தலைவரும்  முன்னாள் ஹிண்ட்ராப் போராட்டவாதியுமான வசந்தகுமார் பி.கே.ஆர் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் தங்களை சுயேட்சைகளாகவும் அறிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment