Thursday 11 June 2020

உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குக- மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர்-
அந்நியத் தொழிலாளர்களை காட்டிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முதலாளிமார்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.

சம்பளம் வழங்கும் அடிப்படையில் உள்ளூர் தொழிலாளர்களை விட அந்நியத் தொழிலாளர்களே முதலாளிமார்களின் தேர்வாக உள்ளது.

சில தொழில் துறைகளில் அந்நியத் தொழிலாளர்களின் பங்களிப்பை நாம் தவிர்க்க முடியாது.அதற்கு நாம் தயாராக இல்லை. குறிப்பாக தோட்டத் துறைகளில் அந்நியர்கள் பணிபுரிவது தவிர்க்க முடியாது. 
ஆனால் குமாஸ்தா போன்ற அலுவலகப் பணிகளிலும் அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதை ஏற்க முடியாது.

அதே போன்று பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் நிரப்புபப்வர்களாக அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் சில பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் நிலைய முகப்பிடங்களில் அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

3டி எனப்படும் அசுத்தமான, ஆபத்தான, அருவருப்பான துறைகளை முன்பு உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணித்தனர். அது அப்போது அவர்களின் தேர்வாக இருந்தது. ஆனால் நிலைமை இப்போது வேறாக உள்ளது. 

நாட்டின் பொருளாதாரச் சூழலில் வேலைவாய்ப்பின்மையை பெரும்பாலானோர் எதிர்நோக்கியுள்ள நிலையில் 3டி துறைகளில் உள்ளூர் தொழிலாளர்கள் பணியாற்ற தயக்கம் காட்ட மாட்டார்கள் என்பதை  முதலாளிமார்கள் உணர்ந்து வேலை வாய்ப்புகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment