Monday 18 December 2017
புந்தோங் இந்தியர்கள் மீதான புறக்கணிப்பு தொடரும் வரை தேமுவின் தோல்வியும் நீடிக்கும்- விவரிக்கிறார் ஜெயசீலன்
புகழேந்தி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
எதிர்க்கட்சியின் 'வலிமையான கோட்டை' என முத்திரை குத்தப்பட்டுள்ள புந்தோங் தொகுதியில் உள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் போக்கே தேசிய முன்னணி மீதான வெறுப்புணர்வுக்கு காரணமாக அமைகின்றது.
புந்தோங் தொகுதியில் வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதே அவசியமாகும். ஆனால் கொடுத்த வாக்குறுதியும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் நீடிக்கும்போது தேசிய முன்னணி வேட்பாளரால் எவ்வாறு வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்?
எதிர்க்கட்சியினரை மக்கள் ஆதரிப்பது அவர்கள் மீதான பிரியத்தினால் அல்ல. பிரச்சினைகளை தீர்க்கச் சொல்லி ஏமார்ந்து கிடக்கும் மக்கள் வெறுப்புணர்வே எதிர்க்கட்சியின் வெற்றி என்பதை உணராதவரை தேசிய முன்னணியால் இங்கு வெற்றி பெற முடியாது என பேராக் நேசக்கரங்கள் இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் ராஜு விவரிகிறார்.
'பாரதம்' மின்னியல் ஊடகத்திற்கான சிறப்பு நேர்காணலின்போது புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் நிலவும் அவலங்களை அடுக்கடுக்காக விவரிக்கிறார் இவர்.
"இந்தியர்களின் மீதான புறக்கணிப்பு, தீர்க்கப்படாத பிரச்சினை, தீர்க்கப்பட வேண்டிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அலைகழிப்பு, வாழ்வாதாரத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியாத இந்தியர்களின் அவலங்கள் என புந்தோங் வட்டார மக்களின் வாழ்வில் முன்னேற்றம் இல்லாத அவலம் நீடிக்கும் வரை தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு எட்டாக் கனியே."
ஏன், எதனால் இந்த அவலம்? என்பதை ஜெயசீலனிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் விரிவாக அலசலாம்.
'நேர்க்காணல்' விரைவில்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment