Saturday 23 December 2017

குறுஞ்செயலி குறும்படம் திரைப்படமாக உருவெடுக்கிறதா?




இளம் இயக்குனர் வதனி குணசேகரனின் இயக்கத்தில் அண்மையில் தலைநகரிலுள்ள பவிலியன் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியீடு கண்ட குறுஞ்செயலி எனும் குறும்படம் திரைப்படமாக உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.

இக்குறுப்படத்தில் முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களையும் பல திறமையான புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர் வதனி குணசேகரன்.

இந்த நவீன காலத்தில் வித்தியாசமான கதையமைப்பில் இளைஞர்கள் தங்களது கைப்பேசியில் தினசரி பயன்படுத்தும் செயலிகளை குறித்து அணைவருக்கும் புரியும் வகையிலும் செயலி குறித்த விழிப்புணர்வு மையப்படுத்தி திரைக்கதை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.


இக்குறும்படத்தில் மேலும் பார்வையாளர்களை கவருவதற்கும் மேருகூட்டவும் தனிப்பாடலை காணொளி பாடலாக இயக்கியுள்ளார். இப்பாடலுக்கு ஜாளி இசையமைத்துள்ளார். பாடலில் நாட்டில் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவரான விகடாகவி மகேன் முக்கிய வரிகளில் பாடி நடித்துள்ளார்.

மேலும், இந்த பாடலில் திருப் செங்கேட் குழுவைச் சார்ந்த ஹார்டி பி, ரகுவரன், ருபன் தி பிளாக், கதிர் கிரன்கி, மணி வில்லன்ஸ், பவித்ரா நாகரத்தினம் ஆகியோர் இப்பாடலில் பாடியுள்ளனர்.
பாடலின் வரிகளை ஃபீனிக்ஸ்தாசன் மற்றும் மணி வில்லன்ஸ் எழுதியுள்ளனர்.

இக்குறும்படத்தின் வழி மலேசிய சினிமாவில் கதிர் கிரன்கி, நிவாஷன் கணேசன், கிதா தேவி, மோகன் சந்திர தாஸ், ஸ்ரீ குமாரன் முனுசாமி, ரிக்நாவின் மணியரசு, குமரேஸ் இளங்கோவன், விஜய் மனோகரன், குமுதா வாணி குமராவேலு மற்றும் லில்லி ருபினி லாஸாருஸ் அறிமுகப்படுத்தியுள்ளார் குறுஞ்செயலி இயக்குனர் வதனி குணசேகரன்.


திறமையான படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை அப்படி கிடைக்கும் பட்சத்தில் அதனை கலைஞர்கள் சரியாக பயன்படுத்தியுள்ளனர். அன்பே அருயிரே எனும் கானொளி பாடல் வழி மலேசிய சினிமாவில் ஒரு சிறப்பான படைப்பை இயக்கி சாதனை செய்த உங்கள் நாட்டு பெண்மணியான வதனி குணசேகரனுக்கு எனது வாழ்த்துகள் மேலும் அதிகமான சிறந்த படைப்புகளை உருவாக்குங்கள் என சன் குழுமத்தின் அதிகாரி வினோத் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment