Monday 4 December 2017
எதிர்க்கட்சியை நம்புவதால் எவ்வித பயனும் இல்லை- பிரதமர் நஜிப்
கோ.பத்மஜோதி, வி.மோகன்ராஜ்
கோலாலம்பூர்-
நாட்டின் தொடர் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு தொடரப்பட வேண்டும். தேசிய முன்னணியின் ஆட்சியில் மட்டும்தான் பல்வேறு சமூகமும் நாடு முன்னேற்றம் காணும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.
நாடு தொடர்ந்து பல்வேறு துறைகளில் பீடுநடை போட வேண்டுமானால் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் நிலை பெற்றிருக்க வேண்டும். அது நடைபெற இந்தியர்கள் ஆதரவு தேசிய முன்னணிக்கு தொடரப்பட வேண்டும்.
எதிர்க்கட்சியினர் கூறும் ஆசை வார்த்திகளில் இந்திய வாக்காளர்கள் ஏமார்ந்து விடக்கூடாது. அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசலாம். ஆனால் அவையனைத்தும் 'வெட்டிப் பேச்சு' மட்டுமே.
அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் அனைத்து சமூகத்தையும் சார்ந்ததாகவே வரையறுக்கப்படுகிறது. ஏனெலில் அனைத்து இன மக்களின் நலனை காக்கும் அரசாக தேசிய முன்னணி திகழ்கிறது.
அந்த திட்டங்களில் இந்திய சமுதாயமும் விடப்படவில்லை. இந்திய சமுதாயத்தின் நலனை காக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 'மலேசிய இந்தியர் பெருவரைவு திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் இந்திய சமுதாயத்தில் அடிப்படை பிரச்சினைகள் மட்டுமின்றி பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளிலும் முன்னேற்றம் காண்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆதலால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய சமுதாயத்தின் ஆதரவு தேசிய முன்னணி தொடரப்பட வேண்டும் என வலியுறுத்திய டத்தோஶ்ரீ நஜிப், எதிர்க்கட்சியினரை நம்புவதால் எவ்வித நன்மையும் விளையபோவதில்லை என இன்று பிரிக்பீல்ட்ஸ், மெனாரா பேங்க் ரக்யாட் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 9ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இம்மாட்டில் தேமு தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மூத்த ஆலோசகர் டாக்டர் பி.ராமசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, கட்சி பேராளர் என திரளானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment