Thursday 14 December 2017

வீட்டில் தீ; நான்கு பேர் பலி


சிப்பாங்-
அதிகாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த தீச் சம்பவத்தில் நான்கு பேர் பலியாகினர்.  சிப்பாங்,  தஞ்சோங் செப்பாட், ஜாலான் தெப்பி லாவுட் பகுதியிலுள்ள வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் முதியவர்கள் இருவர் உட்பட சிறார்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் லிம் மாய் சாக் (68), சியா தி நாங் (73), சியா யுவான் பின் (3) ஆகியோர் உட்பட அடையாளம் காணப்படாத 9 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

7.4x 7.4 மீட்டர் சதுர அளவில் அமைந்துள்ள இந்த வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது என சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் படையின் துணை இயக்குனர் முகமட் சானி ஹருல் தெரிவித்தார்.

காலை 6.08 மணிக்கு சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்த 15 தீயணைப்பு அதிகாரிகள்  கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து சடலங்களை மீட்டனர்.

No comments:

Post a Comment