Saturday 23 December 2017

6 மணிநேர சோதனையில் 46 சம்மன்கள்


ஈப்போ-
ஈப்போ வட்டாரத்தில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 46 சம்மன்கள் வழங்கப்பட்டன.  6 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் போலி பெர்மிட்டை பயன்படுத்திய லோரி தடுத்து வைக்கப்பட்டது.

இந்நடவடிக்கை குறித்து பேசிய மாநில சாலை போக்குவரத்து, விசாரணை இலாகா துணை கண்காணிப்பாளர்  கமருல்ஸமான் ஜுசோ, இச்சோதனையில் 11 லோரிகள், 24 வாகனங்கள், 8 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வேன், ஒரு எம்பிவி வானகம் ஆகியவற்றுக்கு சம்மன் வழங்கப்பட்டது.

வாகனத்தை வேகமாக செலுத்தியது, அதிக எடை, ஓட்டுநர உரிமம் இல்லாதது, சிவப்பு விளக்கை மீறி சென்றது போன்ற குற்றங்களுக்காக இந்த சம்மன்கள் வழங்கப்பட்டன.

இதில் ஒரு லோரி ஓட்டுநர் போலி பெர்மிட்டை பயன்படுத்தியதோடு அதிக எடை கொண்டுச் சென்றதால் தடுத்து வைக்கப்பட்டது. தரை பொது போக்குவரத்து ஆணையத்தின் பெர்மிட் படி அந்த லோரியில் 51,000 கிலோகிராம் எடை மட்டுமே ஏற்ற முடியும். ஆனால் 56,000 கிலோகிராம் எடை வரை அதில் பொருட்களை ஏற்றலாம் என போலி பெர்மிட்டில் கூறப்பட்டுள்ளது.

தடுத்து நிறுத்தப்பட்ட அந்த லோரியின் 26 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர்  2010 தரை பொது போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 57(பி) பிரிவின் கீழ் மேல் விசாரணைக்காக ஈப்போ ஜேபிஜே அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டார். பிடிபட்ட லோரியின் அசல் பெர்மிட்டுக்காக காத்திருக்கிறோம்.

மேலும். இச்சோதனையில் மூன்று லோரி ஓட்டுனர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளது  சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் ஷாபு போதைப்பொருளையும் மற்ற இருவர் கஞ்சாவையும் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர் என்றார் அவர்.

இந்த சோதனை நடவடிக்கையில் பேராக் மாநில சாலை போக்குவரத்து, விசாரணை இலாகா, சாலை போக்குவரத்து இலாகா, போதைப்பொருள் தடுப்பு இலாகா ஆகியவை ஈடுபட்டன.

No comments:

Post a Comment