Tuesday, 12 December 2017

உடைந்தது 'பாண்டவர் அணி'; பொன்வண்ணன் ராஜினாமா


சென்னை-

நடிகர் சங்கத்தில்  அன்றாடம் நிகழும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை கூட்டி வரும் நிலையில் அச்சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் விலகியிருப்பது மேலும் பரபரப்பை எகிறச் செய்துள்ளது.

நடிகர் சங்கத்திலிருந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரை நடிகர் விஷால் களத்தில் குதித்து வரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்ததிலிருந்து சினிமா உலகைச் சேர்ந்த சிலர் விஷாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளட்ர் சங்கப் பொதுக்குழு கூட்டம் தொடங்கிய சில மணிநேரத்தில் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து நடிகர்கள் சேரன், டி.ராஜேந்தர், சுரேஷ் காமாட்சி ஆகியோர் விஷாலுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலின்போது விஷாலின் 'பாண்டவர் அணி'யில் இணைந்து பொன்வண்ணன் போட்டியிட்டார்.
பொன்வண்ணனின் ராஜினாமாவினால் 'பாண்டவர் அணி' உடைந்துள்ளது.

No comments:

Post a Comment