புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பேராக் நேசக்கரங்கள் இயக்கம், புந்தோங்கில் செயல்படும் குரு கல்கிடார் தேசியப் பள்ளியில் பாதுகாவலர் குடிலை நிர்மாணித்துள்ளது.
மழையிலும் வெயிலும் பணியில் ஈடுபட்டு வரும் இப்பள்ளி பாதுகாவலர் நலனை கருத்தில் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதாக இவ்வியக்கத்தின் தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.
இப்பள்ளிக்கு தற்செயலாக வந்தபோது பள்ளி தலைமையாசிரியர் அப்துல் ரஷிட் முகமட ஹசான் பாதுகாவலர் குடிலை கட்டிக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மழை,வெயில் எங்களது பாதுகாவலர் துன்பப்படுகிறார். அதற்கு ஏதேனும் தீர்வு காணங்கள் என கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேராக் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி தி.தங்கராணி உதவியுடன் பாதுகாலவர் குடில் கட்டி முடிக்கப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாதுகாவலர் குடிலுக்கான சாவி அண்மையில் பள்ளி பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டது என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment