Wednesday 6 December 2017

முதல் முறையாக 60 மாணவர்கள் வீணை வாசிக்கவுள்ளனர்! – ஸ்ரீமதி மோகன பிரியா ஆனந்த்


வீணை இந்தியர்களின் இசை கருவிகளில் ஒன்றாகும். அதனை கற்று அதில் சிறப்பு பெற்றவர்கள் வீணையை மேன்மெலும் வளரச் செய்ய நடப்பு முறைக்கு ஏற்ப சினிமா பாடல்களுக்கும் மற்ற பாடல்களுக்கும் வீணையைப் பயன்படுத்த முடியும் என்று  நிரூபித்துள்ளனர். ஆனால் சமீபக் காலமாக வீணையை பயன்படுத்துவது குறைந்து வருகின்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் வீணை கற்றுக் கொள்வதோடு நின்று விடாமல் கற்று கொண்டதை  அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும் அவர்களுக்கு வீணை பற்றிய ஆர்வத்தை கொடுக்கவும் முதல் முறையாக மலேசிய திருநாட்டில் 60 மாணவர்கள் 50 முதல் 80ஆம் ஆண்டு வரையிலான சினிமா பாடல்களை  வீணையில்  வாசிக்கவுள்ளனர்.


ஸ்ரீ இராகம் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் யயாசான் கெபாஜிக்கான் ராக்யாட் மலேசியா ஏற்பாட்டில் "நெஞ்சம் மறப்பதில்லை" எனும் இசை நிகழ்ச்சி அறநிதிக்காக பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் சென்டரில் வரும் 23ஆம் தேதி  இரவு 7.00 மணிக்கு மிகப்   பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளராகவும் இந்நிகழ்வின் ஆதரவாளராகவும்  பிரபல வீணை வித்வான்களான இராஜேஸ் வாய்த்யா, பி.கண்ணன், ஒய்ஜி. மகேந்திரன், திஆர் சாம்பசிவம் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் சமுவேல் டேவிட், டேவிட் ஆறுமுகம் என முக்கிய பிரமுகர்கள் கலந்துச் சிறப்பிக்கவுள்ளனர்.

வரும் 2018ஆம் ஆண்டு பள்ளிக்குச் செல்லும் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகச் செலவுக்காக இந்நிகழ்வில் திரட்டப்படும் நிதி வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை எதிர்ப்பார்ப்பதாகவும் ஸ்ரீ இராகம் ஃபைன் ஆர்ட்ஸ் ஆசிரியர் ஸ்ரீமதி மோகன பிரியா ஆனந்த் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வுக்கு பொதுமக்களும் வீணை – இசைப் பிரியர்களும் திரளான ஆதரவு வழங்கும்படி அவர் மேலும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வு சார்பாகவும் நுழைவு டிக்கெட் குறித்த விபரங்களுக்கும்  016-2159953 அல்லது 016-3456197 என்ற எண்களுடன் தொடர்புக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment