Wednesday 9 October 2019

கிள்ளான் மாவட்ட அளவிலான சிலம்ப கலை போட்டி

கிள்ளான்-
கிள்ளான் மாவட்ட அள்விலான சிலப்ப கலைப்போட்டி  தாமான் 
செந்தொசா மண்டபத்தில் விமர்சியாக நடைபெற்றது.
அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் சுற்று  வட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலம்ப கலை வீரர்கள் கலந்துக்கொண்டு தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தினர்.

 இப்போட்டியின் ஏற்பாட்டு குழுத் தலைவர் சட்சிதாநந்தன் நாயரின் உரையின் போது சிலம்பம் நம் பரம்பரை கலை .அதனை காப்பதும் தொடர்ந்து வளர்ப்பதும் நமது கடையாகும் என்றும்  சிலம்பமானது தடி அடி, கம்பு சுத்துதல் போன்ற ஒரு தற்காப்பு கலைகளையும் அது உள்ளடக்கி இருப்பதாகவும் மற்ற கலைகளுக்கு எல்லாம் மூத்தக்கலை இதுவே என்றும் அவர் கூறினார்.
இச்சிலம்ப போட்டியைத் தற்காப்பு அமைச்சரும் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான மாட் சாபுவின்  சிறப்பு அதிகாரிகளில் ஒருவரான  ஹஜி நோர்ஹலிம் பின் செரௌமியால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கப்பட்டது.

சிலம்ப கலை என்பது தற்காப்பு கலையையும் தாண்டி ஒவ்வொரு சிலம்ப கலையினரையும் வாழ்வில் முன்னேற உதவும் என்று அதிகாரப்பூர்வ தொடக்க உரையின்போது அவர்  கூறினார்.

வெற்றி பெறப் போகும் அனைத்து மாணவர்களுக்கு பாராட்டுகளை கூறிய அவர், இப்போட்டியில் கிடைக்கும் படிப்பினைகளை வாழ்க்கையில் அமல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
குருவணக்கம், தனி திறன், வீச்சு முறை போன்ற மூன்று வகைகளில் தேர்வு செய்யப்படுவதுடன் இதில் வெற்றி பெறுபவர்கள் ஜொகூரில் நடைப்பெறவிருக்கும் சுக்மா விளையாட்டில் சிலம்பப் போட்டி பிரிவில்  பங்கு கொள்வார்கள் என்றும்   இன்னும் பல சிலம்பக் கலை வீரர்களை உருவாக்குவதே எங்களின் இலட்சியமாகும் என்றும்  சிலம்ப ஆசிரியர் உதயகுமார் கூறினார்.

No comments:

Post a Comment