ஷா ஆலம்-
மலாய்க்காரர் தன்மானம் காக்கும் பேரவையில் ஏற்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் புறந்தள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.
இந்த தீர்மானங்கள் யாவும் முஸ்லீம் அல்லாதோருக்கு எதிராக உள்ளதோடு நாட்டின் அரசமைப்புக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
இந்நாட்டிலுள்ள நாங்கள் (இந்தியர்கள்) நாட்டின் மேமபாட்டுக்காகவே பாடுபட்டுள்ளோமே தவிர நாட்டை சீர்குலைக்கவில்லை.
நாட்டின் அரசமைப்பு விதிகளின்படி அனைத்து இன மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு தாய்மொழி பள்ளிகளிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 20% மலாய்க்காரர்களே ஆதரவளித்துள்ளனர். எஞ்சிய 80% ஆதரவு முஸ்லீம் அல்லாதோர் வழங்கிய ஆதரவு ஆகும்.
முஸ்லீம் அல்லாதோரின் பெரும்பான்மை ஆதரவில் ஆட்சி புரியும் பக்காத்தான் ஹராப்பான் முஸ்லீம் தன்மானம் காக்கும் பேரவையில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை புறக்கணிக்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற இந்த பேரவையில் 2026ஆம் ஆண்டுக்குள் தமிழ், சீனப்பள்ளிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் உட்பட பல தீர்மானங்கள் ஏற்கப்பட்டன.
இந்த மாநாட்டில் பிரதமர் துன் மகாதீரும் பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹடி அவாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment