Friday 11 October 2019

மைபிபிபி கட்சிக்கு நானே தலைவர்- எதிர்த்தாலும் போட்டியிடுவேன்: டான்ஸ்ரீ கேவியஸ்

ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி

பெட்டாலிங் ஜெயா-
மைபிபிபி கட்சிக்கு இப்போது நானே தலைவர். எவர் எதிர்த்தாலும் நிராகரித்தாலும் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.
மைபிபிபி கட்சியில் நீடித்த உட்பூசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தனது தலைமையையே ஆர்ஓஎஸ் அங்கீகரித்துள்ள நிலையில் இப்போது நானே அங்கீகரிக்கப்பட்ட தலைவர்.

தனது தலைமைத்துவத்தை எதிர்த்த அணியினர் தாம் தலைவர் கிடையாது என எதிர்ப்பு தெரிவிக்கலாம். 

மைபிபிபி (பிபிபி) கட்சியை 1993ஆம் ஆண்டிலிருந்து வலுவான கட்சியை உருவாக்க பல தியாகங்களை செய்துள்ளேன். குடும்பம், நேரம், பணம் என்று பல தியாகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்கட்சியை அழித்து விட அனுமதிக்க மாட்டேன். இது நான் கட்டியெழுப்பிய கட்சி.

தலைவர் பதவிக்கு விரும்புவர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். யார் போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்து நானும் போட்டியிடுவேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது டான்ஸ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment