Wednesday 2 October 2019

‘கீதா ராணி’ கதாமாந்தர்கள் நம்மிடமும் உள்ளனர்- கல்வி அமைச்சர் நம்பிக்கை

பூச்சோங்-

ராட்சசி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கீதா ராணி’ போன்ற கதாமாந்தர்கள் நம் நாட்டிலும் அதிகமானோர் உள்ளனர் என்ற நம்பிக்கை கொள்வதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் தெரிவித்தார்.
சாதனை புரிந்த ஆசிரியர்களின் கதைகளை மலேசியர்கள் பகிர்ந்து கொள்வதன் மூலம் அது மற்ற ஆசியர்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமையும்.

நமது சாதனை ஹீரோக்களை நாம் பாராட்ட வேண்டும். அடையாளம் காணப்படாத இன்னும் எத்தனையோ ஹீரோக்கள் நம்மிடம் உள்ளனர். சிறந்த கொள்கைகள் கொண்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை பெற்றோரும் மாணவர்களும் கல்வி அமைச்சுக்கு அடையாளப்படுத்த வேண்டும்.

தேர்விலும் விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுதாயத்தின் கடப்பாட்டை இத்திரைப்படம் விவரித்துள்ளது.
நாட்டின் கல்வி கொள்கை உருமாற்றம் பெறுவதற்கு பள்ளிகள் மட்டுமல்லாது சமுதாயத்தின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது.
குறிப்பாக, இத்திரைப்படத்தில் கீதா இதர மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உண்பார். இதை தான் ஊக்குவிப்பதாகவும் அடுத்தாண்டு அமல்படுத்தப்படும் இலவச காலை உணவு திட்டத்தில் இது சாத்தியமாக்கப்பட வேண்டும் என்று  பூச்சோங்கில்  ராட்சசி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையீடலின்போது அவர் இவ்வாறு சொன்னார்.

எஸ்.கெளதம்ராஜ் இயக்கத்தின் வெளியான ‘ராட்சசி’ திரைப்படத்தில் பொறுப்பு மிகுந்த ஆசிரியராக நடித்துள்ள நடிகை ஜோதிகா, பலவீனமாக பள்ளியையும், பொறுப்பற்ற ஆசிரியர்களையும் உருமாற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'ராட்சசி' திரைப்படத்தை கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் பாராட்டியதை அடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஜோதிகாவும் நன்றி கூறினர்.


இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment