Monday 22 June 2020

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு உயரிய பதவி வழங்குக

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மேலவை சபாநாயகர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமைத்துவ மாண்பை அங்கீகரிக்கும் வகைjயில் உயரிய பதவியை வழங்க பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன்  வலியுறுத்தினார்.

மூன்று அரசாங்கம், மூன்று பிரதமர்கள் என சேவையாற்றியுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்துத் தர நன்மதிமதிப்பையும் பெற்றவராக திகழ்கிறார்.

துடிப்பாற்றல் மிக்கவராக, சிறந்த சேவையாளராக விளங்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் செயல் நடவடிக்கைகள் இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு பேருதவியாக அமைந்திடும் என்பதால் அவருக்கான ஒரு பதவியை வழங்கப்படுவதை உறுதி செய்ய தேமு தலைமைத்துவமும் இணங்க வேண்டும்.

மஇகாவை வலுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு உயர் பதவி வழங்கப்படுவதன் மூலம் இந்திய சமுதாயத்திற்கு இன்னும் கூடுதலாக சேவையாற்ற முடியும் என்பதோடு அது தேமுவை வலுபடுத்த அடித்தளமாக அமையலாம் என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment