Monday 22 June 2020

பலவீனம் அடைந்ததாலே போட்டியிடாமல் விலகிக் கொண்டது பிஎச் கூட்டணி

பெக்கான்-

பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலேயே சண்டையிட்டுக் கொள்ளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தாங்கள் பலவீனமான கட்சி என்பதை ஒப்புக் கொள்வதாலேயே சினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டுள்ளது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

சினி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு இன்று நடைபெற்ற நிலையில் தேசிய முன்னணி தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. சுயேட்சை  வேட்பாளர்கள் இருவரும் களத்தில் குதித்துள்ளதால் இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தற்போது பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக உருவெடுத்துள்ளது.

கோவிட்-19 பேரிடர் சூழலிலும் மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இப்போதுகூட ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் 300 கிலோவாட்டிற்கும் குறைவாக மின்சாரத்தை  பயன்படுத்தியுள்ள 4 மில்லியன் மக்களுக்கு மின்சாரக் கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான திட்டங்களை பின் கூட்டணி முன்னெடுக்கும் நிலையில் பிஎச் கூட்டணி இன்னும் பலவீனம் அடைந்து கொண்டிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும் கூட கேமரன் மலை உட்பட பல்வேறு இடைத்தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்தது. 

தொடர் தோல்வி, உட்கட்சி பூசல், பலவீனம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சினி இடைத் தேர்தலிலும் போட்டியிடாமல் பக்காத்தான் ஹராப்பான் ஒதுங்கி கொண்டுள்ளது என்று சினி வேட்புமனுத் தாக்கலில் தேமு வேட்பாளரை ஆதரித்து  களமறங்கிய டத்தோஸ்ரீ தனேந்திரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment