கோலாலம்பூர்-
மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு 3 திட்டங்களுக்காக 17 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தியர் உருமாற்று மையமான 'மித்ரா'வுக்கு 10 கோடி வெள்ளி (வெ.100 மில்லியன்), தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 கோடி வெள்ளி (வெ. 50 மில்லியன்), இந்தியர்களுக்கான வர்த்தக கடனுதவி திட்டமான 'தெக்குன்' திட்டத்திற்கு 2 கோடி வெள்ளி (வெ.20 மில்லியன்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2020க்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் நேற்று மக்களவையில் அறிவித்தார்.
No comments:
Post a Comment