கோலாலம்பூர்-
மூன்றாண்டுகளுக்கு தாம் பிரதமர்
பதவியை வகிக்கப் போவதாக வந்த தகவலை துன் மகாதீர் மறுத்துள்ளார்.
நான் மூன்றாண்டுகளுக்கு பதவி
வகிக்கப்போவதாக சொல்லவில்லை. நாட்டின் கடனை 80 விழுக்காடாக குறைப்பதற்கும் நாட்டின்
மொத்த உற்பத்தியை 54 விழுக்காடு உயர்த்துவதற்கும் நடப்பு அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள்
அவசியமாகிறது என்று மட்டுமே குறிப்பிட்டதாக அவர் சொன்னார்.
இதற்கு முன்னர் பிரதமர் பதவி
ஒப்படைப்பு விவகாரம் பேசி தீர்க்கப்பட்டுள்ளதாகவும்
அது முடிந்து போன விவகாரம் என்றும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார்
இப்ராஹிம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment