பொருளாதார
விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை
காணொளியில் இருப்பது என் மகன் அல்ல என்று
ஹஷிக் அப்துல்லாவின் தந்தை அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
இந்த
ஆபாச காணொளியை நான் பார்த்தேன். ஆனால் அதில் இருப்பது என் மகன் என்பதை என்னால் உணர
முடியவில்லை.
பலமுறை
பார்த்தபோதிலும் அது என் மகன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, அந்த காணொளியில்
உள்ள ஆடவரின் உடலமைப்பு, அசைவுகள், குரல் போன்றவை ஆராய்ந்தேன். அது ஜோடிக்கப்பட்ட
ஒன்றாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன் என அப்துல் அஸிஸ் கூறினார்.
No comments:
Post a Comment