பொருளாதார விவகார அமைச்சர்
டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை தொடர்புபடுத்தியுள்ள ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பில் தமக்கு
நம்பிக்கை இல்லை என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மட் தெரிவித்தார்.
அரசியல் சதி வேலையாக கருதப்படும்
இந்த காணொளி தொடர்பில் நமக்கு அஸ்மின் அலி மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் எந்தவொரு
தவறான காரியங்களிலும் ஈடுபட்டிருக்க முடியாது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில்
எதையுமே சாத்தியமாக்க முடியும். தொழில்நுட்பத்
துறையில் திறமை வாய்ந்தவர்களாக பலர் உள்ளனர்.
ஒரு நாள் பொறுத்திருங்கள்.
என்னை சம்பந்தப்படுத்திய ஆபாச காணொளி கூட ஒருநாள் இதுபோன்று வரலாம் என்று துன் மகாதீர்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment