Saturday 29 December 2018
போட்டியிடவும் வாக்களிக்கவும் முடியாது; சிவராஜுக்கு விழுந்தது தடை
கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த டத்தோ சி.சிவராஜ் இனி ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் முடியாது என தேர்தல் ஆணையத் தலைவர் அஷார் ஹருண் தெரிவித்தார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பூர்வக்குடியினத் தலைவர்களுக்கு கையூட்டு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிவராஜின் வெற்றி செல்லாது என சிறப்பு தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த சிவராஜ், தேர்தல் குற்றச் சட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோடு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
தற்போது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்த பின்னர் இடைத் தேர்தலில் சிவராஜ் போட்டியிட முடியாது என்ற முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாக அஷார் ஹருண் தெரிவித்தார்.
அடுத்தான்டு ஜனவரி 26ஆம் தேதி கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி வேட்புமனு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment