Wednesday 5 December 2018
சீபில்ட் ஆலய மோதல்; சந்தேகத்தின் பேரில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - ஐஜிபி
கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவம் தொடர்பில் இன்று காலை 8.00 மணிவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 83ஐ எட்டியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் ஏர்கெனவே 68 பேர் கைது செய்யப்பட்ட நிலையி இன்று காலை வரை மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.
இவ்வாலய விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவர் என்று அவர் மேலும் சொன்னார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி ஆலய வளாகத்தில் நிகழ்ந்த மோதலில் 23 கார்களுக்கு தீவைக்கப்பட்டதோடு ஒரு தீயணைப்பு வீரர் உட்பட பலர் காயமடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment