Thursday 3 January 2019

அமைச்சர் பதவியில் வேதமூர்த்தி? மரண விசாரணைக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் - பிரதமர்

கோலாலம்பூர்-
சீபில்ட் ஆலய மோதலில் தாக்கப்பட்டு மரணமடைந்த தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப்பின் முழு மரண விசாரணை கிடைத்தப் பின்னரே ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதா? இல்லையா? என்பது முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்த மோதலில் முகமட் அடிப் தாக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் என்ற முறையில் முகமட் அடிப்பில் மரண விசாரணை அறிக்கையை பார்த்த பின்னரே இறுதி முடிவெடுப்பேன். என்னை பொறுத்தவரை நான் அரசாங்க அதிகாரி. அரசாங்க செயல்முறைக்கு  உட்பட்டவன் நான்.

அவ்வாறான நிலையில் அனைத்துத் தரப்புகளிடமிருந்தும் ஆதாரங்களை பெற்ற பின்னரே முடிவெடுப்பேன். தெளிவான திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது.  இப்போது மரண விசாரணை நடக்கிறது.

வேதமூர்த்தியால் முகமட் அடிப்புக்கு மரணம் விளைவிக்கப்பட்டதா?,  அடிப்
மீதான தாக்குதல் நடத்தியவர்களால் மரணம் ஏற்பட்டதா?, அடிப்பின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன? போன்றவை நமக்கு தெரிந்தாக வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

முகமட் அடிப்பின் மரணத்திற்குப் பின்னர் ஒற்றுமை, சமூக மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கும் வேதமூர்த்தியை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு முஸ்லீம் கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தின.

No comments:

Post a Comment