Thursday 17 January 2019
எம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையில் பார்த்தோம்- இந்தோனேசிய மீனவர்கள்
பெட்டாலிங் ஜெயா-
239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனாவுக்கு பயணித்த எம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையின் அருகில் பார்த்ததாக 4 இந்தோனேசிய மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2014 மார்ச் 8ஆம் தேதி காணாமல் போன இந்த விமானத்தை ஆச்சே எல்லையின் வட சுமத்ரா, பெங்கலான் சுசு பகுதிக்கு அருகில் பார்த்ததாக நான்கு மீணவர்களின் ஒருவரான ருஸ்லி குஸ்மின் (42) தெரிவித்தார்.
சம்பவத்தன்று நான் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பொறியை உயர்த்திக் கொண்டிருந்தபோது 2 கிலோ மீட்டருக்கு அப்பால் விமானம் ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இயந்திர சத்தம் கேட்கவில்லை. ஆனால் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்னர் கரும்புகை வெளியானதை கண்டதாக அவர் சொன்னார்.
239 பயணிகள், விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட எம்எச் 370 விமானம் காணாமல் போனதை அடுத்து நீண்ட நாள் தேடுதலுக்குப் பின்னர் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment