Monday 11 February 2019

பெம்பான் நிலத்திட்டம் ரத்து; 133 இந்தியக் குடும்பங்களின் கனவில் பேரிடி

ஈப்போ- புந்தோங் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்ட பெம்பான் நிலத் திட்டத்தை பேரா மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இப்பகுதியில் வசித்து வந்த 133 இந்திய குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திட்டமே இதுவாகும். கம்போங் செக்கடி உட்பட அதன் சுற்றுவட்டாரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த மக்களுக்கு நிரந்தர இடம் வழங்க கடந்த 1996ஆம் ஆண்டு முதல் மஇகா நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. 2014இல் பெம்பானில் 145 ஏக்கர் நிலத்தை தேமு அரசாங்கம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிலத்தை சீர் செய்ய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வெ. 50 லட்சம் வழங்கினார். இந்த நிலத் திட்டம் ரத்து செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி. சிவசுப்பிரமணியம், புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற்ற தற்போது திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சொன்னார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் இத்திட்டத்தினால் சொந்த வீடுகளை கட்டி குடியேறும் 133 இந்தியக் குடும்பங்களின் கனவில் பேரிடி விழுந்துள்ளது.

No comments:

Post a Comment