Friday 15 February 2019

செமினி இடைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவித்தன 3 கட்சிகள்

கோலாலம்பூர்-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்களை மூன்று கட்சிகள் அறிவித்துள்ளன.

வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக உள்ளூரைச் சேர்ந்த அய்மான் ஸைனாலி களமிறக்கப்படவுள்ளார். பிபிபிஎம் கட்சியை  பிரதிநிதித்து அவர் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

அதேபோன்று தேசிய முன்னணி வேட்பாளராக அம்னோவின் அடிமட்ட உறுப்பினர் ஸக்காரியா ஹனாஃபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பக்காத்தான்  ஹராப்பான், தேசிய முன்னணியை தவிர்த்து பிஎஸ்எம் கட்சி சார்பில் அதன் இளைஞர் பிரிவைச் சேர்ந்த நிக் அஸிஸ் அஃபிக் களமிறக்கப்படவுள்ளார்.

No comments:

Post a Comment