Tuesday 26 February 2019

செமினி தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம்- கணபதிராவ்

ரா.தங்கமணி

புத்ராஜெயா-
செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்

450 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் இடவசதி நலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பள்ளி வாரியக்குழு கோரிக்கை முன்வைத்திருந்தது.

 இப்பிரச்சி னையை காரணம் காட்டி சிலர் அதனை அரசியல் சர்ச்சையாகவும் உண்டாக்கினர்.

இந்நிலையில் இன்று இப்பள்ளியின் நில விவகாரம் தொடர்பில் புத்ராஜெயாவில் கல்வி துணை அமைச்சர் தியோ நீ சி தலைமையில் நில மேம்பாட்டாளரான சைம் டார்பியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது. அதோடு, முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 34 தோட்டப் பாட்டாளிகளுக்கு மலிவு விலை வீடுகளும் 0.7 ஏக்கர் நிலம் ஆலயத்திற்கும் 20,000 சதுர அடி நிலம் தேவாயத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளி நில விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதால் இதனை இன்னும் அரசியல் சர்ச்சையாக உருவாக்க வேண்டாம் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

இதனிடையே, இப்பள்ளிக்கு கூடுதல் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 34 தோட்ட பாட்டாளிகளுக்கான வீடமைப்பு திட்ட வரைபடத்தை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று சைம் டார்பி நிறுவன அதிகாரி குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment