Wednesday 20 February 2019

புல்வாமா தாக்குதல்; தீவிரவாதம் வேரறுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

ஷா ஆலம்-

காஷ்மீர், புல்வாமா பகுதியில் இந்திய துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு மனிதாபிமானமற்ற செயலாகும் அமைந்துள்ள்ளது என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.

தங்களது குடும்பத்தினருடன் விடுமுறையை இனிமையாக கழித்து நாட்டை காப்பதற்காக பணிக்கு திரும்பிய ராணுவப் படையினரை தீவிரவாத தாக்குதல் மூலம் படுகொலை செய்திருப்பது இரக்கமற்ற செயலாகும்.

விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய வீரர்கள் உயிரற்ற சடலமாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடுவது அனைவரின் மனதையும் சுக்குநூறாக நொறுக்கியுள்ளது.
மணிமாறன்

இந்த தீவிரவாத தாக்குதல் புரிந்த கொடியவர்கள் மீது ஈவிரக்கம் காட்டாமல் தீவிரவாதத்தை முற்றாக துடைத்தொழிப்பதில் இந்தியாவுடன் உலக நாடுகள் கைகோர்த்து அதிரடியாக களம் காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு வீர மரணத்தை தழுவியுள்ள வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

கடந்த 14ஆம் தேதி புல்வாமா பகுதியில் சென்ற சிபிஆர்எஃப்  வீரர்களின் பேருந்து மீது 350 கிலோ வெடிமருந்தை நிரப்பிய காரை கொண்டு மோதியதில் 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதோடு பலர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

No comments:

Post a Comment