Monday 18 February 2019

இனவாதத்திற்கு முடிவு கட்டி மிதவாதத்திற்கு துணை நிற்போம்- கணபதிராவ் வலியுறுத்து

காஜாங்-
அம்னோ- பாஸ் கட்சி நடத்தும், இனவாத அரசியலுக்கு முடிவு கட்டி நாட்டு மக்களிடையே மிதவாத கொள்கை வலுபெறுவதற்கு  செமினி  வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இவ்விரு கட்சிகளும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன.  ஆனால் மலேசியர்கள் இனவாதத்திற்கு அப்பாற்பட்டு மலேசியர்களாக இருக்க மட்டுமே விரும்புகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் மக்கள் கூட்டணி அனைத்து இன மக்களின் நலனையும் பாதுகாத்து வருகிறது. இனவாதத்திற்கு அப்பாற்பட்டு மலேசியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

இனவாதத்திற்கு முடிவு கட்டும் வகையில் செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு செமினி வாக்காளர்கள் முழு ஆதரவு வழங்கிட வேண்டும்.

சிறந்த ஆட்சியின் வழி மலேசியராய் நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கும் இனவாதத்தை விரட்டியப்பதற்கும் இந்த இடைத் தேர்தலை ஒரு களமாகக் கொள்வோம் என்று நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment