Monday 11 February 2019

கிளேடாங் ஹில் பகுதியில் சட்டவிரோதமாக காடுகள் அழிப்பு- வன ஆர்வலர்கள், மக்கள் அதிருப்தி

ஈப்போ-
கிளேடாங் ஹில் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக காடுகளை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு வன ஆர்வலர்கள் உட்பட உள்ளூர் பொதுமக்களும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கருதப்படும் கிளேடாங் ஹில் மலைப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டும் நடவடிக்கையை சில தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கையினால் கிளேடாங் ஹில் மலைப்பகுதி தனது இயற்கை வளத்தை இழந்து வருவதாக வன ஆர்வலர்களும் பொது மக்களும் குற்றஞ்சாட்டினர். 

சட்டவிரோதமான முறையில் காடுகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிளேடாங் ஹில் மலைப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்படுவதை பேரா மாநில மந்திரி பெசார் ஃபைசால் அஸுமு அண்மையில் உறுதிப்படுத்தினார்.

No comments:

Post a Comment