வாழ்க்கையில் பல ஏமாற்றங்களும் காதல் தோல்வியுடன் வலம் வரும்
இரு முக்கிய கதாபாத்திரத்தை எவ்வாறு ஒரு நாட்குறிப்பு அவர்களை ஒன்று சேர்க்கின்றது
என்பதை மிக அழகாகச் சித்தரிக்கின்றது ஞாபகங்கள் தொலைக்காட்சி நாடகம்.
விகடகவி மகேன்,சங்கீதா கிருஷ்ணசாமி, டி.எச்.ஆர் ராகா ஆனந்தா, கல்பனா ஸ்ரீ, பிரேம் நாத்
ஆகியோர் இந்நாடகத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நாடகத்தில் விகடகவி மகேன் மற்றும் சங்கீதா முக்கிய
கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இருவருமே தங்களுடைய காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை
எதிர்நோக்கி புதிய ஒரு வாழ்க்கையை நோக்கி பயணிக்கின்றார்கள்.
மகேன் தன்னுடைய காதலி செய்த நம்பிகைத் துரோகத்தை ஏற்று கொள்ள
முடியாமல் ஃப்ரேசர் மலைப் பகுதியிலுள்ள
நூலகத்தின் பொறுப்பாளராகப் பாணியாற்ற செல்கின்றார். அந்நூலகத்தில் அவருக்கு
ஒரு நாட்குறிப்பு கிடைக்கின்றது.
தனிமையில் இருக்கும் மகேனுக்கு அந்த நாட்குறிப்பு துணையாக இருக்குமா? மீண்டும் அவருக்கு காதல் வாழ்க்கை
கிடைக்குமா? கேள்விகளுக்குப் பதில் ஞாபகங்கள்
நாடகம்.
No comments:
Post a Comment