Saturday 14 March 2020

'அதிர்ஷ்டக்காரர்' அஸுமு

ரா.தங்கமணி

ஈப்போ-
'அரசியலில் யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? நம்ம பதவியை தக்க வெச்சுக்கனும்' எனும் சுயநல அரசியல் சதுரங்க ஆட்டம் தான் இப்போது மலேசிய அரசியலில் அரங்கேறி கொண்டிருக்கிறது.
மத்திய அரசாங்கத்தில் நிலவிய அதிகார மாற்றத்தைத் தொடர்ந்து ஜோகூர், மலாக்காவை தொடர்ந்து பேரா மாநில அரசையும் ஆட்டம் காணச் செய்தது.

பேரா மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைக்கின்ற நிலையில் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸுமு பைஸாலே மீண்டும் மந்திரி பெசாராக பதவியேற்கிறார்.

பக்காத்தான் ஆட்சியானாலும் சரி பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சியானாலும் சரி நானே மந்திரி பெசார் எனும் பதவி அதிகார தோரணை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்த மக்களின் எதிர்பார்ப்பு மட்டும் பொய்யாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment