Tuesday 10 March 2020

அமைச்சரவை பட்டியலை பிரதமர் இன்று அறிவிக்கலாம்?

கோலாலம்பூர்-
தனது தலைமையிலான அமைச்சரவைக் குழுவை பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவிக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை 5.00 மணியளவில் அமைச்சரவை உறுப்பினர்களை அவர் அறிவிக்கக்கூடும் எனவும் அதற்கு முன்னதாக காலை 11.00 மணியளவில் மாமன்னரை சந்தித்து அமைச்சரவை பட்டியலை சமர்ப்பிக்கக்கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த அமைச்சரவையில் பெர்சத்து, தேசிய முன்னணி, பாஸ், ஜிபிஎஸ் ஆகிய கட்சிகள் பிரதிநிதிக்கக்கூடும்.

கடந்த மாதம் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி டான்ஶ்ரீ முஹிடின் யாசின் 8ஆவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.


No comments:

Post a Comment