Wednesday 18 March 2020

''மைசெல்'' முயற்சியில் இரு இந்தியருக்கு ''மைகார்ட்" கிடைத்தது

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்தின் ஆதரவோடு ''மைசெல்'' (MySel) பிரிவின் கீழ் இரு இந்தியர்களுக்கு நீல நிற அடையாள அட்டை  ''மைகார்ட் ''பெற்று தரப்பட்டது.

மூதாட்டி திருமதி அழகு சுப்பையா (வயது 75), திருமதி திலகவதி ஆகிய இருவருக்கும் பல நாள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக நீல நிற அடையாள அட்டை கிடைக்கப்பெற்றுள்ளதாக மைசெல் பிரிவின் அதிகாரி திருமதி சாந்தா தெரிவித்தார்.
சிறு வயதிலேயே தனது பிறப்புப் பத்திரத்தை தொலைத்து விட்ட திருமதி அழகு, நீல நிற அடையாள கிடைக்க முடியாமல் தவித்தார். பல தொடர் நடவடிக்கையினால் சிவப்பு நிற அடையாள அட்டை மட்டுமே கொண்டிருந்த அவர், 2011ஆம் ஆண்டு முதல் நீல நிற அட்டை விண்ணப்பிக்க தொடங்கினார்.

அந்த முயற்சிகள் யாவும் பலன் தராத நிலையில் செஜாங்காங், பங்ளிமா காராங் வட்டார இந்திய கிராமத் தலைவர் கமலக்கண்ணன் முயற்சியில் மைசெல் அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் கொண்டுள்ள இச்சமயத்தில்  தனக்கு நீல நிற அடையாள அட்டை கிடைக்கப்பெற்றுள்ளது அளவில்லா மகிழ்ச்சி அளிப்பதாக திருமதி அழகு கூறினார்.

அதேபோன்று, இந்தியாவை சொந்த தாய்நாடாகக் கொண்ட திருமதி திலகவதி, மலேசியரை திருமணம் புரிந்து இங்கு குடியேறியுள்ளார்.

அரசாங்கம் விதித்த அனைத்து சட்டவிதிமுறைகளையும்  முறைப்படி பின்பற்றி சிவப்பு நிற அடையாள அட்டையை பெற்ற இவர், 2015ஆம் ஆண்டு முதல் நீல நிற அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முயற்சித்துள்ளார்.

பின்னர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வழிகாட்டுதலில் மைசெல் அதிகாரியை சந்தித்து, நீல நிற அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன்.
சில வருட காத்திருப்புக்குப் பின்னர் தற்போது நீல நிற அடையாள கிடைத்துள்ளது.

நீல நிற அடையாள அட்டை கிடைத்துள்ளதால் தற்போது தானும் மலேசிய பிரஜை எனும் அந்தஸ்த்து கிடைப்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திருமதி திலகவதி கூறினார்.

இவ்விருவருக்கும் கிடைக்கப்பெற்ற அடையாள அட்டையை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வழங்கினார். மைசெல் பிரிவு கணபதிராவின் தலைமையின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment