Tuesday 17 March 2020

மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை: பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா- 

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரதமர் முஹிடின் யாசின் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பித்துள்ளார்.

இந்த ஆணை வரும் மார்ச் 18ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த ஆணை உட்படுத்தியுள்ள விவரங்கள்:
 1)  சமய, சமூக, கலாச்சார  நிகழ்வுகள்,பேரணி, விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மக்கள் ஒன்றுகூடலை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை அவசியமாகிறது. அனைத்து இன மக்களின் சமய நிகழ்வுகளையும் இத்தடை உட்படுத்தியுள்ளது. மளிகை கடை, மார்க்கெட், பாசாராயா உட்பட தினசரி அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மையங்கள் தவிர அனைத்து வியாபார தளங்களும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2)  மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மலேசியர்கள் முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்,

3) வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

4) அனைத்து பாலர் பள்ளிகள், அரசாங்க, தனியார் பள்ளிக்கூடங்கள்,முழு தங்கும் வசதி கொண்ட பள்ளிகள், அனைத்துலக பள்ளிகள், சமய பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்படும்.

5) நாடு தழுவிய நிலையிலுள்ள அனைத்து தொழில் திறன் பயிற்சி மையங்களும் மூடப்படுகின்றன.

6) நீர், மின்சாரம், மூலப்பொருள், தொலை தொடர்பு, தபால் துறை, போக்குவரத்து, நிதி, வங்கி, எண்ணெய், எரிவாயு, சுகாதார மையம், மருந்தகம்.தீயணைப்பு துறை, சிறைச்சாலை, விமான நிலையம், பாதுகாப்பு, தற்காப்பு, துப்புரவு,  மளிகைப் பொருள், உணவு விநியோகம் தவிர பிற அனைத்து அரசாங்க, தனியார் அலுவலக மையங்கள் மூடப்படுகின்றன.

No comments:

Post a Comment