Tuesday 16 July 2019

‘மலேசிய சிம்ரன்’ நடிகை ராஜி மரணம்


கோலாலம்பூர்-
மலேசிய கலையுலகில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகை ‘மலேசிய சிம்ரன்’ ராஜலெட்சுமி (ராஜீ) இன்று காலை மரணமடைந்தார்.
மலாக்காவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த ராஜி, இன்று காலை 8.40 மணியளவில் குளியலறையில் தடுக்கி விழுந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மூச்சுத் திணறலை அடுத்து மரணமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

நடிகர் கானாவின் பெரும்பாலான டிவிடி தொடர்களில் நடித்து மலேசியர்களிடையே நன்கு அறிமுகம் ஆனவர் நடிகை ராஜி.

நடிகர் கானா, நடிகர் நண்டு ரமேஷ், நடிகை ராஜி ஆகியோர் கூட்டணி மிகச் சிறந்த நகைச்சுவை கூட்டணியாக மலேசிய கலையுலகில் பரிணமித்திருந்தது.

No comments:

Post a Comment