Saturday 13 July 2019

பிஎஸ்வி லைசென்ஸ் பெற தவறினால் வெ.2,000 அபராதம்

கோலாலம்பூர்-
மின்னியல் அழைப்பு வாடகை கார் ஓட்டுனர்கள் பிஎஸ்வி லைசென்ஸ் வைத்திருப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிஎஸ்வி லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு வெ.2,000 மேற்போகாத அபராதமும் 6 மாதத்திற்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து தலைமை இயக்குனர் ஷஹாருடின் காலிட் தெரிவித்தார்.

பிஎஸ்வி லைசென்ஸ் பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிந்துள்ளது.  இதில் மின்னியல் அழைப்பு வாடகை கார் ஓட்டுனர்களில் 10 விழுக்காட்டினர் மட்டுமே பிஎஸ்வி லைசென்ஸ் கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

அதோடு மின்னியல் அழைப்புக்கான ஸ்டிக்கரை ஒட்டத் தவறினாலும் வெ.2,000 விதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment