Sunday 10 September 2017

எதிர்க்கட்சியில் மூன்று, நான்கு கொடிகள்; தேமுவில் என்றும் ஒரே கொடிதான் - மந்திரி பெசார்

ரா.தங்கமணி

ஈப்போ
எதிர்க்கட்சிக்கு வேண்டுமானால்  மூன்று, நான்கு கொடிகள் இருக்கலாம்; ஆனால் தேசிய முன்னணிக்கு என்றுமே ஒரே கொடிதான். அதுதான் நமது வெற்றியின் சின்னம் என்று பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.

நம்மைப் போல் ஒற்றுமையான, வலுவான கூட்டணியாக எதிர்க்கட்சியால் திகழ முடியாது.  ஏனெனில் அங்கு பல பிரிவினைகள் உள்ளன. நான்கு, ஐந்து கட்சிகள் இருந்தாலும் அவர்களால் ஒருங்கிணைந்த கருத்திணக்கத்திற்கு உடன்பட  முடியவில்லை.
ஆனால் தேசிய முன்னணில் பல கட்சிகள் இருந்தாலும் அனைவரும் ஒரே எண்ணத்தோடு, ஒரே இலக்கோடு பயணிகிறோம். இதுதான் நமது வெற்றியின் அடித்தளமாகும் என இங்கு கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற பேராக் மாநில ஐபிஎப் கட்சியின் 26ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸம்ரி இவ்வாறு கூறினார்.
தேமு கூட்டணியில் ஒரு தோழமைக் கட்சியாக உள்ள ஐபிஎப் கட்சியின் நடவடிக்கைகள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. நாட்டின் பொதுத் தேர்தல்களிலும் இடைத் தேர்தல்களிலும் இவர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

ஆயினும் தேமு உறுப்புக் கட்சியில் இணைவது தொடர்பான அவர்களது கோரிக்கை பரிசீலனயில் உள்ளது. தேமுவின் மீதான ஐபிஎப் கட்சியின் விசுவாசம் தொடரப்படும் வேளையில் அவர்கள் பல்வேறு மானியம், நகராண்மைக் கழக உறுப்பினர் பதவி போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்ப்படும்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்ற பாகுபாடு பார்க்காமல் தேமுவின்  வெற்றி  ஒன்றையே இலக்காகக் கொள்ள வேண்டும்.
ஒற்றுமையே இல்லாத எதிர்க்கட்சியை நாம் வலிமையானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். ஏனென்றால் அங்கு மூன்று, நான்கு கொடிகள் பறக்கின்றன. நாம் ஒரு கொடியை மட்டுமே கொண்டுள்ளோம். அதுதான் தேசிய முன்னணி என டத்தோஶ்ரீ ஸம்ரி கூறினார்

No comments:

Post a Comment