Thursday 28 September 2017

காலத்திற்கேற்ற உருமாற்றமே மஇகாவின் சீர்திருத்தம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்



கோலாலம்பூர்-
மஇகாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் கிளை அளவிலான மஇகாவினர் ஆக்கப்பூர்வ்மாக செயல்படுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது என மஇகா உதவித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்..விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகா, இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெறுவது அவசியமான ஒன்றாகும். மிக நெருக்கடியான காலகட்டத்தில் உள்ள மஇகா  இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்கு ஒரே வழி ஒவ்வொரு கிளைகளையும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பதாகும்.

மஇகாவின் அமைப்பு சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் வழி இனி கிளைகள் யாவும் புத்துயிர் பெற்று செயல்படும். முன்பு கிளை அளவில் செயலற்று கிடந்த செயலவையினர் ஓர் அதிகாரம் படைத்தவர்களாக உருமாற்றம் காண்கின்றனர்.



தேசிய, மாநில, தொகுதி அளவிலான தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம்  கிளை செயலவையினருக்கு  வழங்கப்பட்டுள்ளதால் இனி அவர்கள் துடிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.


கிளை அளவில் அவர்கள் செய்யும் சேவைகள் இந்திய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்திடும். ஆகவே, மஇகா தேசியத் தலைவர்  டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முன்னெடுத்துள்ள ஆக்கப்பூர்வ சீர்திருத்தம் காலத்திற்கேற்ற ஒன்று என மேலவை சபாநாயகருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

No comments:

Post a Comment