Tuesday 19 September 2017

ஐபிஎப் கட்சியின் 'கனவு' பலித்தது; செனட்டர் பதவி ஏற்கிறார் டத்தோ சம்பந்தன்

ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
ஐபிஎப் கட்சியின்  நீண்டகால கோரிக்கையான செனட்டர் பதவியை அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் ஏற்கவுள்ளார்.

அதற்கான உறுதிக் கடிதத்தைப் பெற்றுள்ள டத்தோ சம்பந்தன், இன்னும் சில நாட்களில் செனட்டராக பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஇகாவை விட்டு விலகிய பின்னர் ஐபிஎப் கட்சியை தோற்றுவித்த அதன் முன்னாள் தேசியத் தலைவர் அமரர் டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனுக்கு பிறகு எட்டாக்கனியாக இருந்த செனட்டர் பதவியை,  தற்போது டத்தோ சம்பந்தன் ஏற்பதன் மூலம் 15 ஆண்டுகால எதிர்பார்ப்பை தேசிய முன்னணி அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளது.

ஏழை பாட்டாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐபிஎப் கட்சி, ஒவ்வொரு தேர்தல் காலகட்டங்களின்போதும் தேசிய முன்னணிக்கு கடுமையாக உழைத்து அதன் வெற்றிக்கு பாடுபட்டுள்ளது.

தற்போது டத்தோ சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ள செனட்டர் பதவியின் மூலம் மேலும் ஓர் இந்தியர் கட்சிக்கு தேசிய முன்னணி  அரசாங்கம் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பதை இது புலப்படுத்துகிறது.

No comments:

Post a Comment