Thursday 14 September 2017

தீ பற்றிய சமயப்பள்ளி: ஒப்புதல் வரைபடத்தை காட்டிலும் வேறுபட்டு கிடக்கிறது - அமைச்சர் நோ ஓமார்

கோலாலம்பூர்-
25 பேரின் உயிரை பலி கொண்டுள்ள சமயப்பள்ளி தீயணைப்புத் துறையின்  ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்ட கட்டட வரைபடத்தில் உள்ள கட்டட அமைப்பைவிட  நிஜத்தில் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் டான்ஶ்ரீ நோ ஓமார் தெரிவித்தார்.

"இந்த பள்ளி கட்டடம் தொடர்பில் தீயணைப்புப் படையினர்  கட்டடம், கட்டட கலை  வரைபடத்தை பெற்றுள்ளனர். ஆனால் உண்மையான வரைபடத்தில் திறந்த நிலையில் திட்டங்களே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
3ஆவது மாடி திறந்த நிலையிலும்  சுவர் இல்லாமலும் 2 பாதுகாப்பு படிகளைக் கொண்டுள்ளதாகவும் அந்த வரைபடம் உள்ளது. ஆனால் நிஜத்தில் இதற்கு நேர்மாறாக பள்ளி கட்டடம் உள்ளது என அவர் சொன்னார்.

இதனிடையே, இப்பள்ளிக்கான சிசிசி சான்றிதழ் (நிறைவு, ஒப்புதல் சான்றிதழ்) வழங்கப்படாத நிலையில் இப்பள்ளி செயல்பட்டுள்ளது என தீயணைப்புத் துறை உறுதிபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment