Sunday, 17 September 2017

பிரதமரின் இன்றைய முக்கிய அறிவிப்பு என்ன?


கோலாலம்பூர்-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிடவுள்ளார் என சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் செய்தியால் அந்த அறிவிப்பு  பொதுத் தேர்தலுக்கான அறிகுறியாக இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள  டத்தோஶ்ரீ நஜிப், இன்று பிற்பகல்  4.45 மணியளவில் அம்னோ தலைமையகத்தில் நிருபர்களை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பில் அனைத்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களும்,மாநில மந்திரி பெசார்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட்,
பெர்லிஸ் மாநிலத்திற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பெரும்பாலோரின் எதிர்ப்பார்ப்பான நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான அறிப்பாக இருக்குமோ? என்ற யூகமும் வலுத்து வருகிறது.

No comments:

Post a Comment