சுகுணா முனியாண்டி
பட்டர்வொர்த்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் இந்நாட்டின் சட்டப்பூர்வ பிரஜைகள் என்ற நிலையில் மதிப்பளிக்கப்படவேண்டும். இனம் அல்லது மத ரீதியில் ஓரங்கட்டபடக்கூடாது என்பதை தேசிய முண்ணி அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நினைவுறுத்தினார் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மஇகாவின் பேராளர் மாநாட்டில் தாம் 'இந்தியர்களின் மேம்பாட்டு தந்தை' என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கூறிருப்பது தமக்கு வியப்பை தருவதாக கூறிய அவர் , இந்நாட்டு இந்தியர்கள் பொருளாதார ரீதியில் கண்டுள்ள வளர்ச்சி என்னவென்பதை இந்தியர்களை ப் பரதிநிதிப்பதாக கூறும் மஇகா விளக்கம் கொடுக்க முடியுமா? என ஜசெ க துணைப் பொதுச் செயளாளருமான அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டின 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தேசிய முன்ணனி அரசாங்கம் வெற்று வாக்குறுதிகள் தருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் .
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வரும் அம்னோ தலைமையிலான தேசிய முன்ணணி அரசாங்கம் இந்திய சமூக பொருளாதார நிலை மாற்றப்படவும் இல்லை; உயர்த்தப்படவும் இல்லை என்பதுதான் உண்மை என மேலும் கூறினார் .
அம்னோ ஆதிக்கத்தில் இருப்பதனால் மஇகாவினால் இந்திய சமூகத்திற்கு எந்தவோர் ஆக்கப்பூர்வ மேம்பாடு, பொருளாதாரத் திட்டங்களை அமலுக்கு கொண்டுவர இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment