'மெர்டேக்கா..... மெர்டேக்கா......மெர்டேக்கா.....'
ஆகஸ்ட் 31... இன்று அனைத்து மலேசியர்களின் தாரக மந்திரமாக திகழ்கிறது 'மெர்டேக்கா' எனும் வாசகம். இது வெறும் வாசகம் அல்ல. ஆதிக்ககாரர்களின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பிய நமது முன்னோர்களின் கறுப்பு அத்தியாயத்தை பதிவு செய்துள்ள கறை படிந்த வரலாற்றின் முன்னுரையே ஆகும்.
பிரிட்டிஷாரின் பிடியிலிருந்த நாட்டை மீட்டு சுதந்திர உணர்வுடன் வாழ வேண்டும் என்று விரும்பிய பல ஆத்மாக்கள் முன்னெடுத்த விடுதலை போராட்டம் வலிகளையும் கொடுமைகளையும் தன்னகத்தே புதைத்து கொண்டுள்ளது.
பல துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் மத்தியில் கிடைக்கப் பெற்ற விடுதலையை (சுதந்திரம்) இன்று நாம் எளிமையாக கருதுகிறோம். அதன் விளைவே அவ்வப்போது எழுப்பப்படுகின்ற இன விவகாரங்கள் ஆகும்.
No comments:
Post a Comment