ரா.தங்கமணி
ஷா ஆலம்-
இந்நாட்டில் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் சமய விழாவான தைப்பூச விழாவை மாறுபட்ட சூழலில் மலேசிய இந்தியர்கள் கொண்டாட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.
உலகையே புரட்டி போட்டுள்ள கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இவ்வாண்டு தைப்பூச விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது வீட்டிலிருந்தே முருகப் பெருமானை மனமுருகி வேண்டிக் கொள்ளலாம்.
சமயத்திற்கும் பக்திக்கும் நடுவே சுகாதாரத்திற்கும் உயிருக்கும் முன்னிரிமை அளித்து பெருங்கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசும் தைப்பூச விழா கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது.
விளம்பரம் |
எப்போதும் ஆலயத்திற்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டு தங்களை தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் பக்தர்கள் இன்று தங்களது வீட்டையே ஆலயமாகக் கருதி மனமுருகி முருகப் பெருமானை வேண்டிக் கொள்வோம்.
பல இன மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் அனைத்து மக்களின் சமய நம்பிக்கைகளும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் எந்தவொரு சூழலிலும் மறைந்து விடாமல் சமய நல்லிணக்கமும் மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும் இன்னும் மேலோங்கிட வேண்டும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment