கோலாலம்பூர்
உழவர் திருநாளான தைப் பொங்கல் திருநாளைக் உழவர்களும் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு பெரும் துணையாக இருக்கின்ற சூரியனுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் முதல் நாள் சூரியப் பொங்கலையும் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்கின்றோம்.
சூரிய உதயத்தின்போது பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். உழவர்களுக்கு மட்டுமின்றி மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.கடந்தாண்டு தொடங்கிய கொரோனா கிருமி தொற்றிலிருந்து உலகம் இன்னும் மீட்சி பெறாத நிலையில் கனத்த இதயத்துடன் இந்த பொங்கல் திருநாளை நம் மண்ணில் கொண்டாட முடியாத நிலையில் சிலாங்கூர் மாநில அரசி உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
விளம்பரம் |
மாநில விழாவாக பல ஆண்டுகள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் விழா, இவ்வாண்டு மக்கள் நலன் கருதி நடத்தப்படாது என நினைக்கும்போது கவலையளிக்கிறது.
இனம், மொழி, வர்ணம் கடந்து மூவின மக்களின் ஒற்றுமைக்கு வித்தாக அமைந்திடும் பொங்கல் விழாவை இவ்வருடம் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக கொண்டாடி மகிழ்வோம்.
'உழவர் திருநாளாம் தை பொங்கல் பெருநாள் உழுது உண்டு வாழ்வோர் களத்து மேடு சென்று, புதிர் எடுத்து பொங்கல் இட்டு, பகலவனை தொழுது பின் படையல் இட்டு செய்நன்றி செலுத்தும் நன்னாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்' என்று கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டாார்.
No comments:
Post a Comment